ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, April 23, 2020

#10 - விபூதி சந்தி

#10 - விபூதி சந்தி


வித்த தே3ஹாகா3ர தா1ரா
1த்ய மித்ராதி33 ளொளகெ3 கு3
சித்த புத்4யா தி3ந்த்ரியக3ளொளு ஞான கர்மதொ3ளு |
1த்த1தா3ஹ்வயனாகி31ரெசுத1
சத்யசங்கல்பானு ஸாரதி3
நித்யத3லி தா1 மாடி3 மாடி3பனெந்து3 ஸ்மரிஸுதி1ரு ||10


வித்த தேஹாகார தாராபத்ய = வித்த = த்ரவ்ய, தேக, அகார = வீடு. தாரா = கணவன் / மனைவி. அபத்ய = மக்கள். 
மித்ராதிகளொளகெ = நண்பர்கள், ஆகியோர்களில்
குண சித்த புத்யாதிந்த்ரியகளொளு = குண = சத்வாதி குணங்களிலும். சித்த, புத்தி, மனஸ், அஹங்காரம் ஆகிய இந்திரியங்களிலும்
ஞான கர்மதொளு = ஞானேந்திரிய கர்மேந்திரியங்களிலும்
தத்ததாஹ்வயனாகி கரெஸுத = அந்தந்த பெயர்களில் அழைத்துக் கொண்டு
ஸத்யசங்கல்பானு சாரதி = தான் சத்யசங்கல்பன் என்று அழைத்துக் கொள்வதற்கு ஏற்ப
நித்யதலி = தினமும்
தா = தான் 
மாடி மாடிபனெந்து = செய்து, செய்விக்கிறான் என்று
ஸ்மரிசுதிரு = நினைத்துக் கொள்.

தன் தேகம், மனைவி / கணவன், மக்கள் ஆகியோர்களில் பகவத்விபூதியை அறியவேண்டுமென்று சொல்கிறார். தன் வீட்டில் இருக்கும் த்ரவ்யம் (பொருட்கள்), தன் தேகம், வீடு, மனைவி மக்கள், நண்பர்கள் ஆகியோர் என அனைவரிலும் அகண்ட ரூபத்தினால் பரமாத்மன் இருந்து, பூஜைக்கு உதவும் பொருட்களாக இருக்கிறான் என்று அறியவேண்டும். மேலும், சாத்விக, ராஜஸ, தாமசர்களில் சத்ய, ரஜஸ், தமோ ரூபனாக இருந்து, தான், தன் மனைவி ஆகிய அனைவரின் சித்த, புத்தி, மனஸ், அஹங்காரகளிலும், ஞானேந்திரியங்களிலும், கர்மேந்திரியங்களிலும், அந்தந்த பெயரினால் அழைத்துக் கொண்டு, ‘சத்ய சங்கல்பதோ விஷ்ணுர் நான்யதாதுகரிஷ்யதி’ என்னும் பிரமாணத்தைப் போல, தினந்தோறும், மேற்சொன்ன மக்களில், இந்திரியங்களுக்குள்ளும் இருந்து, கர்மங்களை தான் செய்து, அந்த மக்களால் செய்விக்கிறான் என்று நினைக்கவேண்டும். தன்னிலும், மனைவி, மக்கள் ஆகியோரில் அகண்ட ரூபத்தையும், அவர்களின் கை, கால் ஆகிய இந்திரியங்களில் கண்ட ரூபத்தையும் நினைக்கவேண்டும். 

***

Wednesday, April 22, 2020

#9 - விபூதி சந்தி

#9 - விபூதி சந்தி


அஷ்ட13ள சத்ஹ்ருத3ய க1மலா
தி3ஷ்டிதனு தானாகி3 சர்வோ
த் க்1ருஷ்டமஹிமனு த1லக3ளலி சஞ்சரிஸு தொ1ளகி3த்து3 |
து3ஷ்டரிகெ3 து3ர்பு3த்தி3 கர்ம வி
சிஷ்டரிகெ3 சுக்ஞான த4ர்ம சு
பு1ஷ்டிகை3சுத1 ந்த1யிப நிர்து3ஷ்ட1 சுக2பூர்ண ||9


நிர்துஷ்ட = நிர்தோஷியான
சுகபூர்ண = பூர்ணானந்த ஸ்வரூபனான
ஸர்வோத்க்ருஷ்ட மஹிமனு = சர்வஸ்ரேஷ்ட மகிமைகளைக் கொண்டவனான ஸ்ரீபரமாத்மன்
அஷ்டதள = 8 தளங்களைக் கொண்ட
ஸத்ஹ்ருதய கமல = இதயம் என்னும் கமலத்தில்
அதிஷ்டிதனு = இருக்கிறான்
தளகளலி = எட்டு தளங்களில்
சஞ்சரிஸுத ஒளகித்து = இதய கமலத்தில் உள்ளேயிருந்து
துஷ்டரிகெ = அயோக்கியர்களுக்கு
துர்புத்தியன்னு = கெட்ட புத்தியை
கர்மவிசிஷ்டரிகெ = சத்கர்மங்களை செய்யும் சத்பக்தர்களுக்கு
சுஞ்ஞானதர்ம = உத்தமமான தர்மத்தை
தர்மபுத்தியன்னு = நற்புத்தியை
சம்புஷ்டிகைசுத = நன்றாக புரியுமாறு கொடுத்து
சந்தெயிப = சமாதானப் படுத்துகிறான்.

முந்தைய பத்யத்தில், பூஜை சாமான்களில் இருக்கும் விபூதி ரூபங்களை சொல்லியவாறு, இப்போது இதய கமலத்தில் இருக்கும் பகவத் விபூதி ரூபத்தை சொல்கிறார். இதய கமலத்தின் எட்டு தளத்தில் சஞ்சரித்தவாறு, தோஷங்கள் அற்ற, பூர்ணானந்தமயனான, சர்வோத்க்ருஷ்ட மகிமையுள்ள ஸ்ரீஹரி, அந்த கமலத்தில் உள்ளே இருந்துகொண்டு, தமோ யோக்யர்களுக்கு துர்புத்தியையும், சத்கர்மங்களை செய்பவர்களுக்கு சுக்ஞான தர்மங்களையும் அதிகப்படுத்தி, மக்களை சமாதானம் செய்கிறார்.

***

#8 - விபூதி சந்தி

#8 - விபூதி சந்தி


வாரியொள கி3ப்ப1த்து1 நாலகு1
மூரெரடு சாவிரத3மேல் மு
ந்னூரு ஹதி3னேளெனிப ரூபவு ஸ்ரீதுளசித3ளதி |
நூரு அரவத்தொந்து3 பு1ஷ்ப1தி3
மூரதி4கத3ஷ தீ3பதொ3ளு நா
நூருமூரு சுமூர்த்திக3ளு க3ந்த3தொ3ளகி3ருதிஹவு ||8


வாரியொளகெ = தண்ணீரில்
இப்பத்து நாலகு = 24 ரூபங்கள்
ஸ்ரீதுளசிதளதி = ஸ்ரீதுளசிதளத்தில்
மூரெரடு சாவிரத மேல் முன்னூரு ஹதினேளெனிப = 3+2=5. 5000+317 = 5317
நூறு அரவத்தொந்து = 161 ரூபங்கள்
புஷ்பதி = பூக்களில்
மூரதிகதஷ = 3+10 = 13 ரூபங்கள்
தீபதொளு = தீபத்தில்
நானூரு மூரு சுமூர்த்திகளு = 403 ரூபங்கள்
கந்ததொளகிருதிஹவு = சந்தனத்தில் இருக்கின்றன.

பூஜை சாமான்களில் இருக்கும் அகண்ட பகவத்ரூபங்களை 3ம் பத்யத்தில் சொல்கிறார் தாசராயர். இந்த பத்யத்தில் எந்தெந்த பொருட்களில் எவ்வளவு ரூபங்கள் உள்ளன என்பதை சொல்கிறார். 

தண்ணிரில், வாரி என்னும் சொல்லின் எண்ணிக்கையின்படி, வா = 4, ரி = 2. இதனை வலது பக்கத்திலிருந்து படித்தால், 24 ரூபங்கள் உள்ளன. ஸ்ரீதுளசி சொல்லின் எண்ணிக்கையின்படி ஸ்ரீ=7 து=1 ல=3 ஸி=5 அதாவது, 5317 ரூபங்கள். புஷ்பங்களில் பு=1 ஷ்=6 ப=1 அதாவது 161 ரூபங்கள் உள்ளன. தீபங்களில், தீ=3 ப=1 என்று 13 ரூபங்கள். கந்தத்தில் (சந்தனத்தில்) = க=3 ந்=0 த=4, அதாவது 403 ரூபங்கள் உள்ளன என்று அறியவேண்டும். 

***

Tuesday, April 21, 2020

#7 - விபூதி சந்தி

#7 - விபூதி சந்தி


பிம்ப3ரூபனு ஈ தெரதி ஜட
பொ1ம்ப3சுர மொத3லாத3 சுரரொள
கி3ம்பு3 கொ3ண்டி3ஹ னெந்த3ரிது த4ர்மார்த்த2 காமக3|
ஹம்ப3லிஸ த3னுதி3னதி3 விஷ்வ கு
டு1ம்பி3 கொ1ட்ட க1ணான்ன கு1த்ஸித
கம்ப3ளியெ சௌபா4க்ய வெந்த3வனங்க்ரிக3ள ப4ஜிஸு ||7


பிம்பரூபனு = பிம்பரூபியான ஸ்ரீபரமாத்மன்
ஈ தெரதி = முன்பு சொன்ன விதத்தில்
ஜட = ஜடரூபமான சல, அசல பிரதிமைகளில்
பொம்பஸுர = பொம்ம = தங்கத்தின். பஸுர = கர்ப்பம். அதாவது, ஹிரண்யகர்ப்பம் என்னும் பிரம்மதேவன் ஆகிய
சுரரொளகெ = தேவதைகளில்
இம்புகொண்டிஹனு = சஹஜ ரூபத்தால் நிலைத்திருப்பவன்
அரிது = என்பதை அறிந்து
தர்மார்த்தகாமகள = தர்மார்த்த காமங்களை
ஹம்பலிஸதெ = விரும்பாமல்
அனுதினதி = தினந்தோறும்
விஷ்வகுடும்பி = ஜகத்குடும்பியான ஸ்ரீபரமாத்மன்
கொட்டகணான்ன = கொடுத்த அரிசிகளை
குத்ஸிதகம்பளிய = மிகச்சிறிய கிழிந்த கம்பளி ஆடையை
சௌபாக்யவெந்து - இது நமக்கு சௌபாக்கியம் என்று நினைத்து
அவன = பரமாத்மனின் கமலங்களை வணங்கு.

முந்தைய பத்யங்களில் சொன்னதைப்போல, பிம்பரூபியான பரமாத்மன், சலாசல பிரதிமைகளில், அஹித சஹஜாதி விபூதியினாலும், பிரம்மாதிகளில் சஹஜவாத விபூதியினாலும் இருக்கிறான் என்று சிந்தித்து, தர்மார்த்த காமங்களை வேண்டாமல், நிஷ்காமத்தினால் தினந்தோறும் பஜித்தவாறு,, விஷ்வகுடும்பியான பரமாத்மன் கொடுத்த மிகச்சிறிய அளவிலான அரிசியானாலும்,, மிகவும் நைந்த / கிழிந்த கம்பளியானாலும், அதை பயன்படுத்தியவாறு, இதுவே நம் சௌபாக்கியம் என்று அறிந்து, இடைவிடாமல் எந்நேரமும் பரமாத்மனின் பாதகமலங்களை வணங்கு. இதுவே உனக்கு முக்திக்கான வழி.

***

#6 - விபூதி சந்தி

#6 - விபூதி சந்தி


கரண நியாமகனு தானுப
கரணதொ3ள கை3வத்தெரடு ஸா
விரத3 ஹதினைததி31 ஷதரூபங்க3ளனெ த4ரிஸி |
இருதிஹனு தத்ரூபனாமக3
ளரிது பூஜிஸுதிஹர பூஜெய
நிருத கைகொம்ப த்ருஷார்த்தனு ஜலவ கொம்ப3ந்தெ1 ||6


கரண நியாமகனு = இந்திரியங்களின் பிரேரகனான ஸ்ரீபரமாத்மன்
தா = தான்
வுபகரணதொளகெ = பூஜைக்குப் பயன்படுத்தும் பொருட்களில்
ஐவத்தெரடு சாவிர ஹதினால்கதிக ஷதரூபகளனெ = 53114 ரூபங்களை
தரிஸி = தரித்து
இருதிஹனு = இருக்கிறான்
தத்ரூப நாமகளனரிது = கை, கால் ஆகியவற்றில் அந்தந்த ரூபங்களை தரித்து, அதில் அந்தர்யாமியாகவும் இருந்து, மேற்கூறிய அவ்வளவு ரூபங்களாலும் இருக்கிறான் என்று அறிந்து
பூஜிஸுதிஹர = பூஜையை செய்பவரின்
பூஜெய = பூஜையை
நிருத = தினந்தோறும் (எப்போதும்)
த்ருஷார்த்தனு = தாகம் கொண்டவன்
ஜலவ = தண்ணீரை
கொம்பந்தெ = குடிப்பதைப்போல
கைகொம்பனு = ஏற்றுக்கொள்வான்

ஞானேந்திர, கர்மேந்திரியங்களை நடத்துபவனான ஸ்ரீபரமாத்மன், பூஜைக்குப் பயன்படுத்தும் பொருட்களில், அதன் எண்ணிக்கையின்படி, வு=4, ப=1, க=1, ர=3, ண=5, இதை வலப்பக்கத்திலிருந்து படித்தால், 53114 ஆகிறது. அவ்வளவு பகவத் விபூதி ரூபங்களை பூஜைக்கான சாதனங்களில் (பதார்த்தங்களில் / பொருட்களில்) அறிந்து, பூஜிப்பவர்களின் பூஜையை, தாகம் எடுத்தவன் உடனடியாக எப்படி தண்ணீரைக் குடிக்கிறானோ, அதுபோல பரமாத்மன் ஏற்றுக்கொள்கிறான். 

***

Monday, April 20, 2020

#5 - விபூதி சந்தி

#5 - விபூதி சந்தி


ஸ்ரீரமண ப்ரதிமெக3ளொளகெ3 ஹதி3
மூரதி4க வாகி3ப்ப மேலை
நூரு ரூபவ த4ரிஸி இப்ப1னு ஆஹிதா1சலதி |
தா3ரு மத2னவகை3யே பாவக1
தோ1ருவந்தெ ப்ரதீ1க சுரரொளு
தோ1ருதிப்பனு தத்த1தா3கா1ரத3லி நோள்பரிகெ3 ||5

ஸ்ரீரமண = லட்சுமிபதி 

ப்ரதிமெகளொளகெ = தங்கம், வெள்ளி, பஞ்சலோகம் முதலான சிறிய பிரதிமைகளில்
ஹதிமூரதிகவாகி = 13 ரூபங்கள் அதிகமாக
ஐனூரு ரூபவ = 500 ரூபங்களை தரித்து (மொத்தம் 513)
இப்ப = இருப்பான்
ஆஹிதாசலதி = ஆலயங்களில், அஷ்டபந்தனங்களால் நிறுவப்பட்டிருக்கும் அசல பிரதிமைகளில்
இப்பனு = எப்போதும் இருக்கிறான். சலபிரதிமைகளில் இருக்கும் பகவத் விபூதிகளுக்கு அஹித விபூதி என்று பெயர். 
தாரு மதனவகையே = அரணியால் மதனம் செய்தால்
பாவகதோருவந்தெ = அக்னி தெரிவதைப் போல
ப்ரதீக சுரரொளு = பிரதிமா ரூபங்களான தேவர்களில்
ததாகாரதல்லி = பிரதிமா தேவதைகளின் உருவத்தில்
நோள்பரிகெ = பார்க்கும் மக்களுக்கு
தோருதிப்பனு = காண்பித்துக் கொள்வான். 

வீட்டில் இருக்கும் பூஜைக்கு ஏற்ற பஞ்சலோஹ பிரதிமைகளில், பிரதிமா என்னும் சொல்லின் எண்ணிற்கேற்ப, ப்+ர=1+2=3, தி=1, ம=5. இதை வலது பக்கமாக படித்தால், 513 ஆகிறது. இவ்வளவு ரூபத்தினால், சஹஜ விபூதி என்று எப்போதும் இருக்கிறான். அஹித விபூதியென்று அசலமாக தேவாலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் சிலா பிரதிமைகளிலும் அவ்வளவே விபூதி ரூபங்களால் வசிக்கிறான். யாகசாலைகளில் அக்னியை உருவாக்குவதற்காக, அரணிக்கட்டையை, இன்னொரு கட்டையால் மதனம் செய்தால், அக்னி வருவதைப் போல, ராமகிருஷ்ணாதி பிரதிமைகளில், அதே உருவத்தினால் ஞானிகளுக்கு தெரிகிறான். காஷ்டத்தில் அக்னி இருந்தாலும், அது நம் கண்ணிற்குத் தெரிவதில்லை. அதையே மதனம் செய்தால் எப்படி அக்னி தெரியவருகிறதோ, அதுபோலவே, சாதாரண மக்களுக்கு சாதாரண பஞ்சலோகாதி பிரதிமைகளைப் போல காணுவான். பக்தியினால் தியானம் செய்யும் ஞானிகளுக்கு தேஜோமயனாக பிரதிமை தேவதா ருபனாக, அதாவது, ராம பிரதிகளில் ராம ரூபியாகவும், கிருஷ்ணாதி ரூபங்களில் அந்தந்த ரூபியாகவும் காண்பித்துக் கொள்வான். 

***


#4 - விபூதி சந்தி

#4 - விபூதி சந்தி


கா13 கா1ஞ்சனதொளகெ3 ஷோபிப
ஆதி3தே1யாஸ்யன தெ1ரதி3 லகு
மீத4வ ப்ரதிதி3னதி3 ஷாலக்ராம தொ3ளகி3ப்ப |
ஐது சாவிரவதி41 மூவ
த்தைது3 மேலைனூரூ ரூபதி3
பூ44ரக3ளபி4மானி திவிஜரொளிப்ப னனவரத ||4

காத காஞ்சனதொளகெ = நன்றாக காய்ச்சிய தங்கத்தில்

ஷோபித = ஒளிரும்
ஆதிதேய = அதிதியின் மக்களான தேவதைகளுக்கு
ஆஸ்யனதெரதி = தலைவரான அக்னியைப் போல
லகுமிதவனு = லட்சுமிபதியான
ப்ரதிதினவு = அனைத்து நேரங்களிலும்
ஐது ஸாவிர மேலெ மூவத்தைததிக வைனூரு ரூபதி = 5535 ரூபங்களால்
ஷாலிகிராமதொளகெ இப்ப = சாலிகிராமத்தில் இருக்கிறான்
அனவரத = எப்போதும் எங்கும் நிலைத்திருப்பவன்
பூதரகளபிமானி = பர்வத அபிமானிகளான
திவிஜரொளு = கருட, சேஷ, ருத்ரரில்
இப்பனு = இருக்கிறான்.

முந்தைய பத்யத்தில் கூறிய பிரதிமை, சாலிகிராம ஆகியவற்றில் இருக்கும் பகவத் விபூதிகளை இங்கு விளக்கமாக சொல்கிறார். இந்த பத்யத்தில் சாலிகிராமத்தில் இருக்கும் பகவத்ரூபங்களை சொல்கிறார்.

பொதுவாகவே தங்கம் மிகவும் ஒளிர்ந்தவாறு இருக்கிறது. அதையே நெருப்பில் போட்டு காய்ச்சினால் எப்படி ஒளிருமோ, அதைப்போல, சாலிகிராமத்தில் பரமாத்மனின் விபூதியை அறியவேண்டும். அக்னிக்கு ஆதிதேயாஸ்ய என்று பெயர். அது எப்படியெனில், இந்திராதிகளுக்குக் கொடுக்க வேண்டிய ஆஹுதியை அக்னியில் கொடுப்பர். தேவதைகள் அக்னி மூலமாக ஆஹுதிகளைப் பெறுவர். ஆகையால், அக்னிக்கு தேவமுக என்ற பெயர் வந்தது. சாலிகிராம என்னும் சொல்லின் எண். ஷா=5 லி-3 க்+ரா=3+2=5, ம=5 இவற்றை வலது பக்கத்திலிருந்து படித்தால், 5535 வருகிறது. பகவந்தன் இவ்வளவு ரூபங்களால் சாலிகிராமத்தில் இருக்கிறான். 

இதைப்போல, பர்வதாபிமானிகளான கருட, சேஷ, ருத்ரர் அனைவரும்கூட இருக்கின்றனர். பர்வதாபிமானிகள், கருடாதிகள் என்னும் விஷயத்தில் (பாரத தாத்பர்ய நிர்ணய 20-68) ‘ஷிவம் சேஷம் கருடஞ்சாஹஸாபி பராவனாத்பர்வத நாமதேர்யா’ என்னும் வாக்கியமே ஆதாரம் ஆகும். இப்படி நீத விபூதிகளை சாலிகிராமத்திலும், விசேஷ விபூதிகளை கருடாதிகளிலும் சிந்திக்க வேண்டும். 

***